ஆங்கில கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தவர்கள் படகு: நால்வர் உயிரிழப்பு
பிரான்ஸ் கடல் பகுதியில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு
பிரான்ஸ் கடற்கரை வழியாக பிரித்தானியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற புலம்பெயர்ந்தவர்களின் சிறிய படகு கவிழ்ந்ததில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் ஆண்கள் என்றும் இரண்டு பேர் பெண்கள் என்றும் பிரான்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை காலை 7 மணிக்கு புலோன் சுர் மெர் அருகே இந்த துயர சம்பவமானது அரங்கேறியுள்ளது.

பிரித்தானிய கடல் பிராந்தியத்திற்கு அத்துமீறிய ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள்: கேபிள்களை சேதப்படுத்த திட்டம்?
டாக்ஸி போட் என்ற சிறிய மோட்டார் படகில் புலம்பெயர்ந்தவர் குழு ஒன்று நுழைய முயன்ற போது கடலின் வலுவான நீரோட்டத்தில் படகு சிக்கி கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 40 பேர் வரை பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டு சிறுவர்கள் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |