அதிகாலையில் பாகிஸ்தானை தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பம்! 100-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் சேதம்.. உறக்கத்தில் இருந்த குழந்தைகள் பெண்களுக்கு நேர்ந்த துயரம்
பாகிஸ்தானில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 20 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குனர் ஜெனரல் Naseer Nasir தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் தெற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. குறைவான ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் 100-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன மற்றும் அரசு கட்டிடங்கள் உட்பட ஏராளமானவை சேதமடைந்துள்ளன.
மேலும், நூற்றுக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர் என்று ஹர்னாய் நகரின் துணை ஆணையர் Sohail Anwar கூறினார்.
அதுசமயம், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Magnitude of a 5.9 #earthquake originated in #Harnai and jolted various parts of Balochistan including Quetta Pakistan. pic.twitter.com/o6DCjaSkCe
— Malik Ali Raza (@MalikAliiRaza) October 7, 2021
பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.