அமெரிக்காவை சிதைத்த 24 சூறாவளிகள்... கென்டக்கியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் மரணம்!
அமெரிக்காவின் கென்டக்கியில் மட்டும் சூறாவளிகளில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அம்மாநில கவர்னர் Andy Beshear தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவின் மத்திய மாநிலங்களான ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி, மிசோரி மற்றும் டென்னசியை சுமார் 24 சூறாவளிகள் தாக்கியது.
சனிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்த கென்டக்கி மாநில கவர்னர் Andy Beshear, சூறாவளிகள் தாக்கியதில் கென்டக்கி மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 50 தாண்டும் என்று நாங்கள் நம்புகிறோம், இறுதியில் இந்த எண்ணிக்கை 70 முதல் 100 ஆக அதிகரிக்கலாம்.
கென்டக்கி வரலாற்றில் இது ஒரு மிக மோசமான சூறாவளி நிகழ்வு. முதற்கட்ட தகவலின் படி, சுமார் 4 சூறாவளிகள் மாநிலத்தை தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இதில், ஒன்று கிட்டதட்ட 200 மைல்களுக்கு மேல் தாக்கிச் சென்று சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தில் குறைந்தபட்சம் 15 கவுண்டிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது. பெரும்பாலான சேதங்கள் Graves கவுண்டியில் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக மேஃபீல்ட் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியில் சிக்கி மேஃபீல்ட் நகரில் உள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலை சிதைந்தது.
Officials are working to rescue people in a #collapsed candle factory. #KYwx #mayfieldtornado #Mayfield, #Kentucky
— Chaudhary Parvez (@ChaudharyParvez) December 11, 2021
Tornado hit #Mayfield, #Kentucky, #UnitedStates #catastrophic #tornadoes #TornadoEmergency #TORNADOWARNING #weather #USA pic.twitter.com/Fdw6lNhay5
சூறாவளி தாக்கிய போது மேஃபீல்ட் நகரத்தில் உள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் சுமார் 110 பணியில் இருந்ததாகவும், இதில் 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கவர்னர் Andy Beshear தெரிவித்துள்ளார்.
Video from the candle factory in Mayfield, Ky. (?:Brandon Robbins) Gov. Beshear confirmed at least 50 deaths in western Ky. following tornadoes Friday night>>> https://t.co/BuQpMh0rSu pic.twitter.com/GK4IlwzZKa
— KFVS News (@kfvsnews) December 11, 2021
தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது ஒரு குறிப்பிடத்தக்க, பெரிய பேரழிவு நிகழ்வு என்று மாநில அவசர மேலாண்மை இயக்குனர் Michael Dorsett கூறியுள்ளார்.