கிரிஸ் நாட்டின் முக்கிய பகுதியில் நடந்த வெடிகுண்டு சம்பவம்: பொலிஸார் விசாரணையில் வெளிவரும் பயங்கரம்
கிரிஸ் நாட்டில் முக்கிய ரயில்வே நிறுவனத்துக்கு வெளியே வெடி குண்டு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேக்கத்தில் வெடிகுண்டு சம்பவம்
கிரேக்க நாட்டின் முக்கிய ரயில்வே நிறுவனமான ஹெலெனிக் டிரெய்னின் மத்திய ஏதென்ஸ் அலுவலகங்களுக்கு வெளியே நிகழ்ந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக கிரேக்க அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெடிகுண்டு மிரட்டல்
வெடிப்பு நிகழ்வதற்கு முன்பு, அடையாளம் தெரியாத ஒருவர் உள்ளூர் செய்தித்தாள் மற்றும் செய்தி இணையதளத்தை தொடர்பு கொண்டு, வெடிப்பு நிகழப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், ஹெலெனிக் டிரெய்ன் அலுவலகங்களுக்கு அருகில் வெடிகுண்டு சாதனம் வைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 40 நிமிடங்களில் அது வெடிக்கும் என்றும் அந்த அழைப்பாளர் கூறியதாக தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், உள்ளூர் செய்தி நிறுவனமான எஃப்ஸின், அழைப்பாளர் குறிப்பாக 35 முதல் 40 நிமிடங்கள் வரை காலக்கெடுவை குறிப்பிட்டு, எச்சரிக்கை விளையாட்டல்ல என்று வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
வெடிப்பைத் தொடர்ந்து, வெள்ளை நிற பாதுகாப்பு உடைகளை அணிந்த காவல்துறை தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
கிரேக்க தலைநகரின் முக்கிய சாலையான சிங்க்ரூ அவென்யூவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, வெடிகுண்டு சாதனம் இருந்த ஒரு பை, ஒரு முதுகுப்பை என விவரிக்கப்பட்டது.
வடக்கு கிரீஸில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 57 பேர் உயிரிழந்த டெம்பி ரயில் விபத்தால் பொதுமக்களிடையே அதிருப்தி அதிகரித்துள்ள காலகட்டத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |