161 கிமீ Range தரும் புதிய Ather 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்திய மின் இருசக்கர வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் Ather Energy, அதன் புதிய மொடலான 450S (3.7 kWh பேட்டரியுடன்) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 161 கிமீ IDC சான்றளிக்கப்பட்ட பயண தூரத்தை (Range) வழங்குகிறது.
இந்த மொ டலின் விலை ரூ.1,45,999 (பெங்களூரு எக்ஸ்ஷோரூம்) ஆகும், மேலும் ஆகஸ்ட் 2025 முதல் இந்தியா முழுவதும் டெலிவரி தொடங்குகிறது.
பெரும்பயணிகளுக்கான சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்:
Ather நிறுவனத்தின் வணிகத் தலைவர் ரவ்னீத் போகேலா: “புதிய 450S, 450X உடன் ஒத்த ரேஞ்சை வழங்குகிறது, ஆனால் குறைந்த விலையில்” என தெரிவித்துள்ளார்.
இது ரேஞ்சுக்கும், ஸ்போர்டி வாகன அனுபவத்துக்கும் முக்கியத்துவம் தரும் பயணிகளின் சிறந்த சாய்ஸாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
திறன்கள் மற்றும் அம்சங்கள்:
- மோட்டார்: 5.4 kW, 22 Nm டார்க்
- வேகம்: 3.9 வினாடிகளில் மணிக்கு 0-40 கிமீ வேகம்
- அதிகபட்ச வேகம்: 90 மணிக்கு கி.மீ.
- 4 ரைடு மோடுகள்: Smart Eco, Eco, Ride, Sport
- டிஸ்ப்ளே: 7 இன்ச் ஸ்கிரீன், Bluetooth, Alexa இன்டிகிரேஷன்
- பாதுகாப்பு அம்சங்கள்: AutoHold, Fall Safe, Emergency Stop Signal
சார்ஜிங்:
0-80% ஹோம் சார்ஜிங் – 4 மணி 30 நிமிடங்கள்
Ather Grid சார்ஜிங் நெட்வொர்க் - நாடு முழுவதும் 3,300 சார்ஜிங் மையங்கள்
விலை:
பெங்களூரு ரூ.1,45,999, சென்னை ரூ.1,47,312, டெல்லி ரூ.1,48,047, மும்பை ரூ.1,48,258.
Ather Eight70 வாரண்டி திட்டம் - 8 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வரை, குறைந்தபட்சம் 70% பேட்டரி ஹெல்த் உறுதி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ather 450S 2025 launch, Ather 450S 3.7 kWh battery, Electric scooters India 2025, Ather 450S price Bengaluru, Best long range electric scooter, Ather Energy new model 2025, Ather Eight70 warranty plan, Ather electric scooter booking