பிறக்கும் போதே இரண்டு கால்களும் இல்லை! இளைஞர் செய்த மிரளவைக்கும் செயலின் வீடியோ
கால்கள் இல்லாத இளைஞர் இரண்டு கின்னஸ் சாதனைகளை முறியடித்தார்.
அமெரிக்காவை சேர்ந்த Clark என்ற இளைஞரின் தன்னம்பிக்கை.
அமெரிக்காவில் கால்கள் இல்லாமல் பிறந்த இளைஞர் இரண்டு கின்னஸ் சாதனைகளை முறியடித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த Clark என்ற இளைஞர் பிறக்கும் போதே இரு கால்களும் இல்லாத நிலையில் பிறந்தவர் ஆவார். ஆனாலும் அவர் மன உறுதியுடன் போராடி விளையாட்டில் தீவிர பயிற்சி எடுத்து கடந்த 13ந் திகதி அன்று 2 கின்னஸ் சாதனைகளை முறியடித்து சாதனை படைத்தார்.
Highest Box Jump மற்றும் Diamond Pushups ஆகிய விளையாட்டுகளில் இந்த சாதனையை Clark படைத்துள்ளார். அதன்படி ஜம்பில் 33 இன்ச் வரை தாவியுள்ளார்.
அதே போல தோள்பட்டை அகலத்திற்குப் பதிலாக வைர வடிவில் கைகளை ஒன்றாக இணைக்கும் Diamond Pushupsலும் அசத்தினார்.
அதன்படி இப்போட்டியின் இரண்டாவது முயற்சியில் அவர் மூன்று நிமிடங்களுக்குள் 248 என புதிய இலக்கை தொட்டுள்ளார்.
Clark பிறக்கும் போதே Caudal regression syndrome என்ற விசித்திர நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.