மிக விரைவில் ராஜகுடும்பத்தில் ஒரு முக்கிய சம்பவம்... ஜோதிடக்கலைஞர் எச்சரிக்கை
கோவிட் முதல் எலிசபெத் மகாராணியாரின் மரணம் வரை துல்லியமாக கணித்த ஜோதிடக்கலைஞர் ஒருவர், மிக விரைவில் ராஜகுடும்பத்தில் ஒரு முக்கிய சம்பவம் நிகழ இருப்பதாக எச்சரித்துள்ளார்.
மிக விரைவில் ராஜகுடும்பத்தில் ஒரு முக்கிய சம்பவம்
பல்வேறு முக்கிய உலக நிகழ்வுகளை துல்லியமாக கணித்ததால் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுபவர் பிரேசில் நாட்டு ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் சலோமே (38).

இந்நிலையில், ராஜகுடும்பத்தில் மிக விரைவில் ஒரு முக்கிய சம்பவம் நிகழ இருப்பதாக ஏதோஸ் எச்சரித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு இறுதிக்கும் 2026ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்கும் இடையில், பிரித்தானிய ராஜகுடும்பத்தில் ஒரு முக்கிய சம்பவம் நிகழ இருப்பதாக ஏதோஸ் தெரிவித்துள்ளார்.

அது, ராஜகுடும்பத்திலுள்ள முக்கிய உறுப்பினர் ஒருவரின் உடல் நலம் சார்ந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |