மருத்துவமனைக்குள் புகுந்து வெறியாட்டம்... இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர்: வெளிவரும் பகீர் சம்பவம்
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றில் புகுந்த இளைஞர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் பலர் இரத்தவெள்ளத்தில் சரிந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ மையத்தில் பகீர் சம்பவம்
ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் அமைந்துள்ள நார்த்சைட் மருத்துவமனை மருத்துவ மையத்தில் தான் தொடர்புடைய பகீர் சம்பவம் நடந்துள்ளது. இதில் நான்கு பெண்கள் காயமடைந்ததுடன் பெண் ஒருவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
அட்லாண்டா நகர பொலிசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டனர். காயமடைந்துள்ள பெண்களில் மூவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், இன்னொருவர் அவசர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் உள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 12 பேர்கள் வரையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருக்கலாம் என்றே அஞ்சப்பட்டது எனவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக நான்கு பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
@AP
இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டதுடன், 24 வயது Deion Patterson எனவும், தாயாருடன் மருத்துவமனைக்கு வந்த அந்த இளைஞர் திடீரென்று ஆத்திரப்பட்டதாகவும், அதன் பின்னர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறுகின்றனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பின்னர், தாயாரை அங்கேயே விட்டுவிட்டு Deion Patterson சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ளார். இந்த நிலையில், ஆயுததாரியான Deion Patterson ஆபத்தானவர் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் அணுகவும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
@EPA
இதனிடையே, அந்த இளைஞரை கைது செய்யும் பொருட்டு, உறுதியான தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு 10,000 டொலர் வெகுமதி அளிக்கப்படும் என அதிகாரிகல் தரப்பு அறிவித்துள்ளது.