காவு வாங்கும் சாத்தான் அட்லாண்டிக் பெருங்கடல்... - விமானம், கப்பல் மாயமாகும் திகிலூட்டும் மர்மம்?
ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கும் அட்லாண்டிக் பெருங்கடலை சுற்றியுள்ள மர்மங்களைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
ஆபத்து நிறைந்த அட்லாண்டிக் பெருங்கடல்
உலகத்திலேயே பசிபிக் பெருங்கடலுக்கு அடுத்தபடியாக இருப்பது அமெரிக்காவில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடல்தான். இக்கடலை சுற்றி புளோரிடா மாகாணம் உள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடல் ரொம்ப ஆழமான கடலாகும். இந்த ஆழமான பகுதியைத்தான் மில்வாக்கி என்று சொல்கிறார்கள். இதன் ஆழம் சுமார் 10,955 அடியாகும்.

சுறா தாக்குதல்
இந்த அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளை புளோரிடா அடக்கியுள்ளது. புளோரிடாவில் உள்ள மைர்னா கடற்கரையில் கடலில் குளிக்கும் மனிதர்களை சுறா மீன்கள் தாக்கி கொல்லும்.
யாராவது மதியம் 2 முதல் 3 மணிக்கு மேல் புளோரிடா கடற்கரையில் குளித்தால் அவர்களை சுறா தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதுவரை 139 சுறா தாக்குதல் நடந்துள்ளன. அதில் மதியம் 2 மணி மேல் 27 சுறா தாக்குதல் நடந்துள்ளன.

பெர்முடா முக்கோணம் மர்மம்
மேலும், ஒரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அட்லாண்டிக் பெருங்கடலில் தான் பெர்முடா முக்கோணம் உள்ளது. இது 7 லட்சம் கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த பெர்முடா முக்கோண பகுதிக்கு மேல் பறக்கும் பறவைகள், விமானங்கள் திடீரென மாயமாகிவிடும்.

அதேபோல், பெர்முடா முக்கோணப் பகுதியில் செல்லும் கப்பல்கள் கூட மாயமாகியுள்ளது. சுமார் 70 ஆண்டுகளாக இந்த மர்மம் நீடித்து வருகிறது.
இதுவரை 1000த்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்த பெர்முடா முக்கோணத்தை சாத்தான் முக்கோணம் என்றும் அழைக்கின்றனர்.
மர்மங்கள் நிறைந்த அட்லாண்டிக் பெருங்கடலில்தான் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி பல்லாயிரக்கணக்கானோரை காவு வாங்கியது.
தற்போது, அந்த டைட்டானிக்கை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து 5 கோடீஸ்வரர்கள் பலியான சம்பவம் உலக மக்களை உலுக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |