முதன்முறையாக தன் குழந்தையின் முகத்தை வெளியில் காட்டிய அட்லி
பிரபல இயக்குனரான அட்லீ குழந்தையின் புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இயக்குனர் அட்லீ
இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் அட்லீ, ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
ராஜா ராணி திரைப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் தெறி மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குனராக உயர்ந்த அட்லீ தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, முதல் ஹிந்தி திரைப்படமாக ஜவான் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படமானது இன்று வெளியாகியுள்ள நிலையில் இயக்குனர் அட்லீயும் அவரது மனைவியான பிரியா இருவரும் முதல் ஷோ சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் குழந்தையின் புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகின்றது.
வைரலாகும் புகைப்படம்
திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பிறகு அட்லீ மற்றும் ப்ரியாவிற்கு பிறந்த அவர்களது மகனின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்திற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |