ATM திருட்டுகள்... சுவிட்சர்லாந்தில் கவலையை உருவாக்கியுள்ள வேறொரு விடயம்
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ஏடிஎம் திருட்டுகள் அதிகரித்துவருகின்றன. சுவிட்சர்லாந்திலும் ஆறு மாதங்களில் எட்டு ஏடிஎம் திருட்டுகள் நடந்துள்ளன.
இந்நிலையில், திருட்டு அல்லாத வேறொரு காரணத்தால் ஏடிஎம் இயந்திரங்களுக்கு உருவாகியுள்ள அபாயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கவலையை உருவாக்கியுள்ள விடயம்
அதாவது, சுவிட்சர்லாந்தில் ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாடு குறைந்துவருகிறது.
வேறு வகையில் கூறினால், ரொக்கம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
ஆக, ஏடிஎம் இயந்திரங்கள் தேவைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்தக் கேள்விக்கு, ஆம், ஏடிஎம் இயந்திரங்கள் நிச்சயம் தேவை என்கிறது Jura Cantonal Bank (BCJ) என்னும் வங்கி.
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டபோது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தமுடியாததால் மக்கள் ஏடிஎம்களை நாடியதை சுட்டிக்காட்டுகின்றன வங்கிகள்.
ஆக, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஒரு பக்கம் இருந்தாலும், ஏடிஎம் இயந்திரங்கள் அதற்கு எதிரானவை அல்ல, அதுவும் இருக்கட்டும், இவையும் இருக்கட்டும், இரண்டும் இணைந்து செயல்படுவதால் மக்களின் பல்வேறு வகையான தேவைகள் சந்திக்கப்படும் என்கிறார்கள் வங்கியாளர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |