சவுதி சர்வதேச விமான நிலையம், மன்னர் காலித் விமானத் தளம் மீது தாக்குதல்
சவுதி சர்வதேச விமான நிலையம் மீதும், மன்னர் காலித் விமானத் தளம் மீது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுத்தி ஆயத்தப்படையின் செய்தித்தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
2014 முதல் ஜனாதிபதி Abdrabbuh Mansour Hadi தலைமையிலான அரசாங்கப் படைகளுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் ஏமன் சிக்கியுள்ளது.
சவுதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டப்படை ஏமன் உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி Hadi-ஐ ஆதரித்தது, மேலும் மார்ச் 2015 முதல் அவரது வேண்டுகோளின் பேரில் அந்நாட்டில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுத்திகள் சவுதி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர், சமீப நாட்களாக சவுதி மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மூன்று Qasef 2k டிரோன்கள் மூலம் அபா சர்வதேச விமான நிலையம் மற்றும் Khamis Mushait-ல் உள்ள மன்னர் காலித் விமானத் தளம் ஆகியவற்றில் இராணுவ இலக்குகளை குறிவைத்து விமானப்படை தாக்குதல் நடத்தியது, தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டது என ஏமனின் ஹவுத்தி ஆயத்தப்படையின் செய்தித்தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏமனில் தொடர்ந்து சவுதியின் அட்டூழியம் அதிகரித்து வருவதால் அதற்கு பதிலடி கொடுக்கும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுத்தி செய்தித்தொடர்பாளர் கூறினார்.