கடவுச்சீட்டை திருடுவதற்காக தோழிக்கு சீஸ் கேக்கில் விஷம் வைத்து கொடுத்த ரஷ்யபெண்!
அமெரிக்காவில் தோழியின் கடவுச்சீட்டை திருடுவதற்காக, சீஸ் கேக்கில் விஷம் வைத்து கொல்ல முயன்ற பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டை திருட திட்டம்
அமெரிக்காவின் நீயூ யார்க் நகரில் வசித்த ரஷ்ய பெண்ணான (Viktoria Nasyrova) விக்தோரியா நசிரோவா(47) என்பவர், தனது தோழிக்கு சீஸ் கேக்கில் விஷம் வைத்து கொல்ல முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
@facebook
நசிரோவாவின் தோழியான ஸ்விக்கிள் என்ற ரஷ்ய பெண் இருவரும் அமெரிக்காவில் பணி புரிந்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் ஸ்விக்கின் அடையாளம், கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை திருடி ரஷ்யாவிற்கு செல்ல திட்டமிட்ட நசிரோவா, சீஸ் கேக்கில் தோழிக்கு விஷம் வைத்துள்ளார்.
@policehandout
வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, நசிரோவா கடந்த 2016 ஆம் ஆண்டில் 35 வயதான குயின்ஸ் குடியிருப்பில் சீஸ் கேக்கை வாங்கி கொண்டு வந்துள்ளார். இருவரும் ரஷ்ய மொழியில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
சிறை தண்டனை
”அப்போது நசிரோவா தோழியிடம் கேக்கை சாப்பிட சொல்லியுள்ளார். அதன்படி கேக்கை சாப்பிட்ட ஸ்விக்கிள் பின்னர் வாந்தி மற்றும் மயக்கம் அடைந்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.” என்று மாவட்ட வழக்கறிஞர் கூறியுள்ளார்.
@dailymail
கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பேசிய ஸ்விக்கிள்
"அவளைப் பொறுத்தவரை, மற்றொரு நபரின் உயிரைப் பறிப்பது எளிதான விஷயம். மற்றொரு நபரின் நம்பிக்கையைப் பெறுவதும் எளிதான விஷயம்" என்று கூறியுள்ளார்.
@dailymail
நீதிமன்றத்தில் தண்டனை வழங்கும் போது, நீதிபதி நசிரோவாவை மிகவும் ஆபத்தானவள் என்று குறிப்பிட்டுள்ளார்.