பட்டப்பகலில் குழந்தையைக் கடத்த முயன்ற நபர்: சமயோகிதமாக தப்பிய சிறுமி
அமெரிக்க நகரமொன்றில், பட்டப்பகலில் சிறுமி ஒருத்தியை மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் சிறுமியைக் கடத்த முயன்ற நபர்
அமெரிக்காவின் மியாமியில் ஒரு வீட்டின் முன்னே பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, சற்று தொலைவில் கார் ஒன்று வந்து நிற்பதைக் கவனித்த பிள்ளைகள் வீட்டுக்குள் செல்ல, Ah’lyric என்னும் 6 வயது சிறுமி மட்டும் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்திருக்கிறாள்.
அப்போது, அந்தக் காரிலிருந்து இறங்கிய ஒரு நபர் மெதுவாக வந்து Ah’lyricஇன் கையைப் பிடித்திருக்கிறார். அவள் அந்த நபருடைய பிடியை உதறிவிட்டு ஓட முயல, உடனே, அவளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து நகர முயன்றிருக்கிறார் அந்த நபர்.
WPLG Local 10
சமயோகிதமாக தப்பிய சிறுமி
உடனே, சட்டென அந்த நபரின் கையைக் கடித்திருக்கிறாள் Ah’lyric. எதிர்பாராமல் கடிபட்டதால் அவர் சிறுமியைக் கீழே போட்டிருக்கிறார். தன்னைக் கடித்ததால் அவளை பளாரென அறைந்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் அவர்.
இதற்கிடையில், அந்த காரின் நம்பர் பிளேட்டை வைத்து அந்த நபரைப் பொலிசார் பிடித்துவிட்டார்கள். அவரது பெயர் Leonardo Venegas (32) என தெரியவந்துள்ளது.
அவரை பொலிசார் விசாரிக்க, அவர் முன்னுக்குப் பின் உளறிக்கொட்டவே, அவரை காவலில் அடைத்துள்ளார்கள் பொலிசார்.
NBC 6
இதற்கிடையில், Leonardoவிடமிருந்து தப்பிய Ah’lyric, தன் தாய்தான் தனக்கு தற்காப்பு முறைகளைக் கற்றுக்கொடுத்ததாகவும், அது நினைவுக்கு வரவே தான் அந்த நபரின் கையை நன்றாகக் கடித்துவிட்டதாகவும் கூறுகிறாள்.
பிள்ளைகள் தங்கள் வீடுகள் முன்னால் விளையாடும்போதே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ள விடயம் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள பொலிசார், பிள்ளைகள் தனியாக விளையாட வேண்டாம் என்றும், யாராவது பெரியவர்களின் மேற்பார்வையில் விளையாடுவது பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளார்கள்.
NBC Miami
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |