முதலில் பழிக்கு பழி...பிறகு தான் ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தை: உக்ரைன் அதிரடி!
ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கலாம் என உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் டேவிட் அராஹமியா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது கிழக்கு பகுதி நகரான செவரோடோனெட்ஸ்க்கில் ( severodonetsk) தீவரமாக நடைபெற்று வரும் நிலையில், நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற உதவும் மூன்று தரைப் பாலங்களையும் ரஷ்ய படையினர் முழுவதுமாக தகர்த்துள்ளனர்.
அத்துடன் உக்ரைனின் கிழக்கு பகுதி நகரங்களை கைப்பற்றுவதிலும் ரஷ்ய படைகள் அங்குலம் அங்குலமாக முன்னேறி வருகின்றனர்.
இந்தநிலையில், ரஷ்யாவிடனான அமைதி பேச்சுவார்த்தை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கலாம் என உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் டேவிட் அராஹமியா தெரிவித்துள்ளார்.
Talks between #Kyiv and #Moscow may resume at the end of August after Ukraine has counterattacked, said head of Ukrainian negotiating team David Arahamia to the Voice of America.
— NEXTA (@nexta_tv) June 18, 2022
The last negotiation meeting between the #Russia and #Ukraine was held in #Istanbul on March 29. pic.twitter.com/6yKDo3hL1u
இதுத் தொடர்பாக பிரபலமான வாய்ஸ் ஆப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிறுவனத்திற்கு டேவிட் அராஹமியா அளித்த பேட்டியில், உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்திய பிறகு, ஆகஸ்ட் மாத இறுதியில் உக்ரைன் ரஷ்யா இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த கருத்தானது, போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயார் என தெரிவித்ததை தொடர்ந்து வெளிவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: கல்லறை கட்டி இன்டர்நெட் எக்ஸ்புளோருக்கு அஞ்சலி: இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!
உக்ரைன் ரஷ்யா இடையிலான கடைசி அமைதி பேச்சுவார்த்தை துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புலில் மார்ச் 29ம் திகதி நடைபெற்றது, ஆனால் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் எத்தகைய மூடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.