பிரித்தானிய வானில் அரங்கேறிய அதிசய நிகழ்வு: வடக்கு ஒளிகள் யார் யாருக்கு தெரியும்?
பிரித்தானியாவின் வானத்தை வடக்கு ஒளிகள் என்ற அற்புதமான இயற்கை நிகழ்வு அலங்கரித்துள்ளது.
பிரித்தானிய வானில் “வடக்கு ஒளிகள்”
பிரித்தானியாவின் பல பகுதிகளில் இரவு வானம் வடக்கு ஒளிகளால் வண்ணமயமாக காட்சி அளித்துள்ளது.
காண்போரை கட்டிப்போடும் இந்த அற்புதமான இயற்கை காட்சி வெள்ளிக்கிழமை இரவு பிரித்தானியாவின் பல பகுதிகளில் அரங்கேறியுள்ளது.
Extreme Northern Lights from last night over Tombstone Mountain Park, Canada 🍁
— Amazing Nature (@AmazingNature00) March 21, 2026
These shots are unreal — some of the most breathtaking aurora photos to come out of Canada this year. 🌌✨
Tonight is the last day you will get to witness the best auroras of our lifetimes, all… pic.twitter.com/JMt1pfxmnS
வெள்ளிக்கிழமை தவிர விட்டவர்கள், சனிக்கிழமை இரவு நிகழும் வடக்கு ஒளிகளின் நடனத்தை மீண்டும் காண முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த அரோரா பொரியாலிஸ்(Aurora Borealis) நிகழ்வு, பூமியின் அதிசய நிகழ்வுகளில் ஒன்று என்று மெட் வானிலை மையம் கருதுகிறது.
இந்த நிகழ்வின் போது, மரகதப் பச்சை மற்றும் ஊதா நிறங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த காட்சிகள் பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்டில் உள்ள பாம்பர்க் பகுதியில் தெளிவாக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆர்க்டிக் வட்டம் மற்றும் ஸ்காட்லாந்தின் வடக்கு பகுதிகளில் மட்டும் காணப்படும் இந்த “வடக்கு ஒளிகள்” வளிமண்டல மாற்றத்தால் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது.

இதன் மூலம் ஸ்காட்லாந்திலும், இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளிலும் அதை பார்க்க முடியும் என்று மெட் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை இந்த வடக்கு ஒளிகள் நிகழ்வு தொடர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் எஸ்தோனியா, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலும் இந்த ஒளிக்காட்சியை பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |