4000 கி.மீ இலக்கை குறிவைத்த ஏவுகணை: அமெரிக்க-பிரித்தானிய ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில் டீகோ கார்சியா இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
டீகோ கார்சியா இராணுவ தளம் மீது தாக்குதல்
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா - பிரித்தானியா நாடுகளின் கூட்டு இராணுவ தளமான டீகோ கார்சியா(Diego Garcia) மீது நள்ளிரவில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு இடைநிலைத் தொலைவு தாக்குதல் ஏவுகணைகள் மூலம் ஈரான் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான Mehr மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானால் ஏவப்பட்ட இந்த இரண்டு ஏவுகணைகளும் இலக்கை அடையவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு ஏவுகணை நடுவானிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்து விட்டதாகவும், மற்றொரு ஏவுகணை அமெரிக்காவின் SM-3 போர்க்கப்பலின் இடைமறிப்பு ஏவுகணை மூலம் அழிக்கப்பட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
ஆனால் இந்த தடுப்பு நடவடிக்கை முழுமையாக வெற்றியடைந்ததா என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் இதுவரை வெளிவரவில்லை.

4000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த இலக்கு
ஈரான் எல்லையிலிருந்து இந்த டீகோ கார்சியா(DIego Garcia) ராணுவம் தளம் சுமார் 4000 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இதில் குறிப்பிட வேண்டிய காரியம் என்னவென்றால், ஈரான் தங்களிடம் உள்ள தாக்குதல் ஏவுகணைகளின் இலக்கு சுமார் 2000 கிலோமீட்டர் தூரம் என்று மட்டுமே கூறி வந்தது.
ஆனால் இந்த தாக்குதல் மூலம் ஈரானின் ஏவுகணை தாக்குதல் தூரம் உலக நாடுகள் கணித்து வைத்திருந்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, சைப்ரஸ் தவிர மற்ற இராணுவ தளங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று பிரித்தானியா தெரிவித்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதலானது நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |