ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு
ஈரான் மீது தாக்குதல் நடத்த சைப்ரஸ் ராணுவ தளம் பயன்படுத்தப்படாது என்று பிரித்தானியா உறுதி அளித்துள்ளது.
சைப்ரஸ் ஜனாதிபதிக்கு பிரித்தானிய பிரதமர் அளித்த உறுதி
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சைப்ரஸ் தீவில் உள்ள பிரித்தானியாவின் RAF Akrotiri ராணுவ தளத்தில் இருந்து ஈரான் மீது எந்தவொரு நேரடி தாக்குதலும் முன்னெடுக்கப்படாது என்று பிரித்தானிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராணுவ எல்லைகளை தெளிவுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

மேலும், சனிக்கிழமை பிரித்தானியா மற்றும் சைப்ரஸ் நாட்டுத் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் போது சைப்ரஸ் ஜனாதிபதி நிகோஸ் கிறிஸ்டோடோலிடிஸிடம், சைப்ரஸ் ராணுவ தளம் ஈரான் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படாது என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனிப்பட்ட முறையில் உறுதியளித்துள்ளார். இதனை பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
விலக்கி வைக்கப்பட்ட அறிவிப்பு

சமீபத்திய அறிவிப்பு ஒன்றில், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரான் ஏவுகணை தளங்கள் மீது தாக்குதல் நடத்த பிரித்தானியா தங்களுக்கு சொந்தமான ராணுவ தளங்களை பயன்படுத்தி கொள்ள அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கி இருந்தது.
இந்நிலையில் சைப்ரஸ் இராணுவ தளம் இந்த உடன்படிக்கையில் இருந்து தற்போது விலக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது சைப்ரஸ் மக்களின் போர் தாக்குதல் குறித்த கவலையை போக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |