சிறுமியை 12 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை!
அமெரிக்காவில் 13 வயதுக்கு குறைவான சிறுமியை பலமுறை வன்கொடுமை செய்த நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரோராவை சேர்ந்தவர் ஆஸ்கர் ஓ ரோஜஸ் (44). இவர் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் 13 வயதுக்கும் குறைவான சிறுமியிடம் பலமுறை தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் ரோஜஸை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி ரோஜஸுக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோஜஸ் 85 சதவீத தண்டனையை அனுபவிக்கும் வரையில் அவருக்கு பரோல் வழங்கப்பட மாட்டாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதோடு பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் வாழ்நாள் குற்றவாளியாக கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.