49 பந்தில் 92 ஓட்டங்கள் விளாசிய கேப்டன்! அவுஸ்திரேலியாவிடம் மண்டியிட்ட தென் ஆப்பிரிக்கா
டர்பனில் நடந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.
மார்ஷ் விஸ்வரூபம்
தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது.
முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 226 ஓட்டங்கள் குவித்தது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 49 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் விளாசினார்.
Reuters
அவருக்கு பக்கபலமாக நின்ற டிம் டேவிட் 28 பந்துகளில் 64 ஓட்டங்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
போராடிய ஹென்ரிக்ஸ்
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் தவிர ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். தன்வீர் சங்கா மற்றும் ஸ்டோய்னிஸின் மிரட்டலான பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணி 115 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஹென்ரிக்ஸ் 43 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்தார். சங்கா 4 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Reuters
மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி நாளை நடைபெற உள்ளது.
Reuters
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |