அறிமுக போட்டியிலேயே ஸ்டம்பை தெறிக்கவிட்ட பவுலர்! ஆட்டநாயகனாக தெரிவாகி மிரட்டல் (வீடியோ)
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ், அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
முதல் டி20 போட்டி
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ரிவர்சைடு மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களே எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 41 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய பிரைடன் கார்ஸ், நியூசிலாந்தின் ஃபின் ஆலனை கிளீன்போல்டாக்கி வெளியேற்றினார்.
A WICKET ON DEBUT! ?
— England Cricket (@englandcricket) August 30, 2023
Lovely bit of bowling from Brydon Carse ? #ÉnglandCricket | #ENGvNZ pic.twitter.com/kX23Emyx6Q
அதேபோல் மில்னேவையும் போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்தார். 4 ஓவர்கள் வீசிய கார்ஸ் 23 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
கார்ஸ் ஆட்ட நாயகன்
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 14 ஓவர்களிலேயே இலக்கினை எட்டி வெற்றி பெற்றது.
டாவித் மாலன் 54 ஓட்டங்களும், ஹரி புரூக் 43 ஓட்டங்களும் எடுத்தனர். அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசிய பிரைடன் கார்ஸ் ஆட்ட நாயகன் விருதினை பெற்றார்.
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |