13 வயது சிறுவனை துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியா முன்னாள் எம்.பி குற்றவாளி என தீர்ப்பு
australia ex mp found guilty for molested 13 year old boy: 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த வழக்கில்,அவுஸ்திரேலியா முன்னாள் எம்.பி ரோரி அமோன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த அவுஸ்திரேலியா முன்னாள் எம்.பி
அவுஸ்திரேலியா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான 37 வயதான ரோரி அமோன், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான டேட்டிங் செயலி மூலம் 13 வயது சிறுவன் ஒருவனிடம் பழகியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு அந்தச் சிறுவன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று அந்த சிறுவனை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையில், அந்த சிறுவன் தன் வயதை 15 என மிகைப்படுத்தி கூறியதாக ரோரி அமோன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம், ரோரி அமோன் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
அமோன் முதன்முதலில் அந்த சிறுவனை தொடர்பு கொண்டபோது, அவர் மெக்கெல்லார் தொகுதியின் கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜேசன் ஃபாலின்ஸ்கியிடம் முழுநேரப் பணியில் இருந்தார்.
அமோன், நார்தர்ன் பீச்சஸ் கவுன்சிலில் இரண்டு முறை பணியாற்றிய பிறகு, 2023 ஆம் பிட்வாட்டர் மாநிலத் தொகுதியின் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகள், அவரை லிபரல் கட்சியிலிருந்து நீக்கவும், மார்ச் 2023 ஆம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பதவி விலகவும் நிர்பந்தித்தன.
தற்போது பிணையில் உள்ள அமோன், தண்டனைத் தீர்ப்பு விசாரணைக்காக நவம்பர் 27 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என கூறப்படுகிறது.