காலே டெஸ்ட்: இரண்டாவது நாளிலும் கெத்து காட்டிய இலங்கை
காலே டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 313 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இன்று அந்த அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறுது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கியது. டிராவிஸ் ஹெட் 6 ஓட்டங்களில் தனஞ்சய டி சில்வா ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
கவாஜா மற்றும் கிரீன் ஜோடி 57 ஓட்டங்கள் சேர்த்தது. அரைசதம் கடந்த கவாஜாவின் விக்கெட்டை வாண்டர்சே கைப்பற்றினார். 130 பந்துகளை சந்தித்த கவாஜா 7 பவுண்டரிகள் விளாசி 71 ஓட்டங்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அதிரடி காட்டினார்.
Fifty up for Usman Khawaja.
— cricket.com.au (@cricketcomau) June 30, 2022
Live #SLvAUS: https://t.co/FT3dcx1fsJ pic.twitter.com/phIXHAfFPu
மறுமுனையில் நிதானமாக விளையாடிய கிரீன் அரைசதம் கடந்தார். அணியின் ஸ்கோர் 241 ஆக இருந்தபோது 45 ஓட்டங்களில் இருந்த கேரி ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை கைப்பற்றிய ரமேஷ் மெண்டிஸ், அடுத்ததாக கிரீனையும் ஆட்டமிழக்க செய்தார். கிரீன் 77 ஓட்டங்கள் விளாசினார்.
PC: Twitter (@cricketcomau)
அதன் பின்னர் வந்த ஸ்டார்க் விக்கெட்டை வாண்டர்சே வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்துள்ளது. கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக 16 ஓட்டங்களில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
PC: Twitter (@cricketcomau)
நாதன் லயன் 8 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை அணி தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வாண்டர்சே 2 விக்கெட்டுகளையும், தனஞ்சய டி சில்வா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அவுஸ்திரேலிய அணி 101 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Bad light ends the day early but Australia's lead is now 101 runs #SLvAUS
— cricket.com.au (@cricketcomau) June 30, 2022
Day two stumps scorecard: https://t.co/FT3dcx1fsJ pic.twitter.com/1nCwECF7ZT