இந்தியர்கள் குறித்து விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர்: மன்னிப்புக் கோர பிரதமர் வலியுறுத்தல்
இந்தியர்கள் குறித்து விமர்சித்த அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மன்னிப்புக் கோரவேண்டும் என அந்நாட்டின் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியர்கள் குறித்து விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர்
அவுஸ்திரேலிய வலதுசாரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜசிந்தா (Jacinta Nampijinpa Price) என்பவர், இந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள், பிரதமர் Anthony Albaneseசார்ந்த கட்சிக்கு வாக்களிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர அனுமதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
அவரது கருத்துக்கள் அவுஸ்திரேலிய இந்தியர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ள நிலையில், ஜசிந்தா சார்ந்த கட்சியினர் உட்பட பலரும் அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என குரல் கொடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
இந்நிலையில், இன்று இந்த விடயம் குறித்து பேசிய அவுஸ்திரேலிய பிரதமரான Anthony Albanese, ஜசிந்தாவின் கருத்துக்கள் இந்தியர்களைப் புண்படுத்தியுள்ளதாகவும், அவற்றில் உண்மையில்லை என்றும், அவரது கட்சியினரே கூறுவதுபோல், அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |