மகளிர் உலகக்கோப்பை காலிறுதியில் நுழைந்த அவுஸ்திரேலியா! நடையைக் கட்டிய டென்மார்க்
டென்மார்க் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது.
புயல்வேகத்தில் கோல் அடித்த வீராங்கனை
அவுஸ்திரேலியா - டென்மார்க் அணிகளுக்கு இடையிலான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி Stadium Australia-யில் நடந்தது.
அவுஸ்திரேலியாவின் கெய்ட்லின் ஃபூர்ட் புயல்வேகத்தில் செயல்பட்டு கோல் அடித்தார் (29வது நிமிடம்).
அதனைத் தொடர்ந்து 70வது நிமிடத்தில் ஹேலே ரஸோவின் மிரட்டலான கோல் மூலம் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகித்தது.
Twitter (@FIFAWWC)
காலிறுதியில் நுழைந்த அவுஸ்திரேலியா
டென்மார்க் அணியால் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
இதுவரை 6 அணிகள் காலிறுதிக்குள் நுழைந்துள்ளன. நாளை நடைபெற உள்ள கொலம்பியா - ஜமைக்கா, பிரான்ஸ் - மொராக்கோ போட்டிகளில் வெற்றி பெறும் எஞ்சியுள்ள இரு அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
Getty Images
Twitter (FIFAWWC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |