மகளிர் உலகக்கோப்பையில் வீராங்கனையின் படுமோசமான செயல்! கடுமையாக விளாசும் ரசிகர்கள் (வீடியோ)
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் Round of 16 சுற்றில் இங்கிலாந்து மற்றும் நைஜீரியா அணிகள் மோதி வருகின்றன.
இங்கிலாந்து வீராங்கனை வெளியேற்றம்
பரபரப்பான இந்த போட்டியின் 87வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரென் ஜேம்ஸின் செயல் பலருக்கும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
நைஜீரிய வீராங்கனை மிச்செல்லே அலோஸி மீது அவர் மீதே விழுந்த லாரென் ஜேம்ஸ், எழுந்து செல்லும்போது வேண்டுமென்றே காலால் அலோஸியின் முதுகில் மிதித்துவிட்டு சென்றார்.
Lauren James has went from hero to zero for England Women at the World Cup!
— Suzesport.com (@SuZeSport) August 7, 2023
She has just seen a red card for this stupidity ?
pic.twitter.com/3gp7NTadKa
இது கமெராவில் தெளிவாக தெரிந்ததைத் தொடர்ந்து, களநடுவர் உடனடியாக லாரென் ஜேம்ஸுக்கு சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றினார்.
இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி
இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களில் லாரென் ஜேம்ஸ் செயலை கடுமையாக ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
Twitter (@livescore)
Twitter (@brfootball)
இதற்கிடையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையிலும் இரு அணிகளின் தரப்பிலும் கோல்கள் விழாததால் பெனால்டிஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |