டி20 உலகக்கிண்ணம்: இங்கிலாந்தை நொறுக்கி சம்பவம் செய்த அவுஸ்திரேலிய அணி
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
சிக்ஸர் மழை
இங்கிலாந்து நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்ததால், முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சிக்ஸர் மழை பொழிந்தது.
டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் கூட்டணி இங்கிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 30 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தது.
வார்னர் 16 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார். அடுத்து ஹெட் 18 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆர்ச்சர் ஓவரில் அவுட் ஆனார்.
A 22-run over!
— cricket.com.au (@cricketcomau) June 8, 2024
The short side boundary is copping it today! #T20WorldCup pic.twitter.com/bzJHNg60Gg
பின்னர் வந்த அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் 25 பந்துகளில் 35 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 28 ஓட்டங்களும் விளாசி வெளியேறினர்.
மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் குவித்தார். மேத்யூ வேட் 17 ஓட்டங்கள் விளாச, அவுஸ்திரேலியா 201 ஓட்டங்கள் குவித்தது.
ஆடம் ஜம்பா மிரட்டல்
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர் கூட்டணி அதகளம் செய்தது. ஆனால் ஆடம் ஜம்பா இந்த கூட்டணிக்கு செக் வைத்தார்.
A superb opening partnership propels England to 93/2 at the end of the 10-over mark against Australia ?#T20WorldCup | #AUSvENG | ?: https://t.co/urU0vYzhXZ pic.twitter.com/QjQL9hQsS8
— ICC (@ICC) June 8, 2024
அவரது ஓவரில் சால்ட் (37) போல்டு ஆக, பட்லர் 42 ஓட்டங்களில் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்தார். வில் ஜேக்ஸ் (10), பேர்ஸ்டோவ் (7) சொதப்பிய நிலையில் மொயீன் அலி 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 25 ஓட்டங்கள் எடுத்தார்.
எனினும் அவுஸ்திரேலிய அணியின் தாக்குதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், ஓட்டங்களை எடுக்க தடுமாறிய இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது. பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டும், ஹேசல்வுட் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
England in deep trouble as they need 66 runs to win from the last three overs against Australia in Barbados.#T20WorldCup | #AUSvENG | ?: https://t.co/2NnApT4OVA pic.twitter.com/wATPbCKut1
— ICC (@ICC) June 8, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |