ஒலிம்பிக்கில் மிரள வைத்த வீராங்கனைகள்! உலக சாதனை படைத்தது அவுஸ்திரேலியா
டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த பெண்களுக்கான நீச்சல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி உலக சாதனை படைத்துள்ளது.
நீச்சல் போட்டியில் பெண்களுக்கான 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் அவுஸ்திரேலிய அணி 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்த உலக சாதனை படைத்துள்ளனர்.
நீச்சல் போட்டியில் பெண்களுக்கான 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் அவுஸ்திரேலிய அணி உலக சாதனை படைத்து தங்கம் வென்றது.
கனடா அணி (3:32.78) இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கதையும், அமெரிக்க அணி (3:32.81) 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
இதற்கு முன் 2018-ல் பெண்களுக்கான 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் 3:30.05 நிமிடங்களில் கடந்து அவுஸ்திரேலிய அணி உலக சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
FIRST WORLD RECORD IN SWIMMING AT #Tokyo2020. ?
— Olympics (@Olympics) July 25, 2021
The Australian women's 4x100m freestyle relay team with one for the history books.#StrongerTogether #Swimming #AUS@AUSOlympicTeam | @fina1908 pic.twitter.com/ap6L7VFx17
தற்போது, அவுஸ்திரேலியா தனது உலக சாதனையை முறியடித்துள்ளது.
அதேபோல், 2016-ல் பெண்களுக்கான 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் 3:30.65 நிமிடங்களில் அவுஸ்திரேலிய அணி பந்தய தூரத்தை கடந்ததே இதுவரை ஒலிம்பிக் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.