கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி

Australia Paris
By Balamanuvelan Aug 01, 2026 04:10 PM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒரு அவுஸ்திரேலிய இளம்பெண், தன்னை சிலர் கடத்த முயன்றதாக தெரிவித்துள்ள தகவல் சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் இளம்பெண் சந்தித்த அதிர்ச்சி

அவுஸ்திரேலியரான ஜான்யா ஹாம்ப்டன் (Djanaya Hampton) என்னும் இளம்பெண் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஈபிள் கோபுரத்தின் அருகே, சூரியோஸ்தனமனத்தைப் பார்ப்பதற்காக அவர் காத்திருக்க, இரண்டு ஆண்கள் அவரை அணுகியுள்ளார்கள். 

அவர்களில் ஒருவர் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கும் ஜான்யா, இருவரும் தன்னிடம் பேச்சுக்கொடுத்ததாகவும், சிறிது நேரம் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்ததாகவும், பின்னர் தாங்கள் ஒரு பார்ட்டிக்குச் செல்வதாகக் கூறி தன்னை அழைத்ததாகவும் தெரிவிக்கிறார்.  

கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | Aus Woman Says I Was Almost Trafficked In Paris

தான் அவர்களுடன் செல்ல மறுக்கவே, தங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளுமாறு வற்புறுத்த, அந்த கவர்ச்சியான ஆண் ஜான்யாவைப் பிடித்து கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக தூக்கியதாக தெரிவிக்கிறார். 

ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்?

ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்?

புகைப்படம் எடுக்கும்போது தான் தன் முகத்தை கையால் மறைத்துக்கொண்டதாக தெரிவிக்கும் ஜான்யா, அவர்களிடமிருந்து தப்புவதற்காக தனது தோழியை வீடியோ காலில் அழைத்து அவரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

அப்போது அந்த இருவரும், அங்கிருந்த ஒரு வியாபாரியிடம் ஜான்யாவைக் காட்டி ஏதோ சொல்வதைக் கவனித்த ஜான்யா, அவர்கள் தன்னை பின்தொடர்வதை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ஹொட்டலாக ஏறியிறங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அவர்கள் தன்னைப் பின்தொடரவில்லை என எண்ணி ரயில் ஒன்றில் ஏற, ஜான்யாவிடம் பேசிய அதே நபர் ஆறு ஆண்கள், இரண்டு பெண்களுடன் அதே ரயிலில் ஏற, திகிலடைந்துள்ளார் ஜான்யா.

அவருடன் மொபைலில் வீடியோ காலில் இருந்த தோழி, மக்கள் நிறைய பேர் இருக்கும் ஒரு ரயில் நிலையத்தில் இறங்குமாறு கூற, சட்டென ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி வேறொரு ரயிலில் ஏறியுள்ளார் ஜான்யா.

ரயில் அமர்ந்த ஜான்யா கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்க, ஒருவர் அவரை நெருங்கி என்ன நடந்தது என கேட்க, அவர் ஒரு செக்யூரிட்டி என்பதை அவர் உறுதி செய்ய, நடந்ததைக் கூறியுள்ளார் ஜான்யா.

ஜான்யா மீது தன் ஜாக்கெட்டை போட்டு மூடியபடி அவரை அழைத்துச் சென்ற அந்த நபர், டெக்ஸி ஒன்றைப் பிடிக்க அவருக்கு உதவ, தான் தங்கியிருக்கும் ஹொட்டலுக்குத் திரும்பியுள்ளார் ஜான்யா.

பின் ஜான்யா பாரீஸிலிருக்கும் அவுஸ்திரேலிய தூதரகத்துக்குச் செல்ல, அவர்கள் அவரை பத்திரமாக அடுத்த விமானத்தில் ஏற்றி அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியுள்ளார்கள்.

இப்படி தான் பிரான்சுக்கு சுற்றுலா சென்ற நிலையில் கடத்தப்பட இருந்த சம்பவத்தை இரண்டு வீடியோக்களாக வெளியிட்டுள்ள ஜான்வி, தான் திரைப்படம் ஒன்றில் இதே போன்றதொரு காட்சியைக் கண்டதாகவும், அதிர்ஷ்டவசமாக கடத்தல்காரர்களிடமிருந்து தான் தப்பியதாகவும் தெரிவிக்கிறார்.

அத்துடன், பிரான்சுக்கு சுற்றுலா செல்வோர் கவனமாக இருக்குமாறும் ஜான்யா கேட்டுக்கொள்ள, இணையத்தில் பரபரப்பு உருவாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் சுற்றுலா செல்லும்போது பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் விவாதங்கள் துவங்க, அதிகாரிகள் கூட்டமான சுற்றுலாத்தலங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தத் துவங்கியுள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US