தூக்கத்திலிருந்த கண் விழித்த பெண்ணொருவருக்கு காத்திருந்த திகில்
அவுஸ்திரேலியாவில், பெண்ணொருவர் தூக்கத்திலிருந்து காலையில் கண் விழித்த நிலையில் அவர் கண்ட காட்சி அவரை திகிலடையச் செய்தது.
தூக்கத்திலிருந்த விழித்த பெண்ணுக்கு காத்திருந்த திகில்
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பெண்ணொருவரை காலையில் மெதுவாக எழுப்பியுள்ளார் அவரது கணவர்.

அத்துடன், நான் சொல்லும் வரை அசையாமல் படுத்திரு என்று அவர் கூற, கண் விழித்த அந்தப் பெண் பயத்தில் உறைந்தார்.
ஆம், அவரது மார்பின் மேல் 2.5 மீற்றர் நீளமுடைய ஒரு மலைப்பாம்பு சுருண்டு படுத்திருந்தது.

Credit : Rachel Bloor
அது, Carpet python வகை மலைப்பாம்பு ஆகும். இந்த வகை பாம்புகள், இரை தேடும்போது அல்லது குளிரிலிருந்து தப்ப, இதுபோல சிறு துவாரங்கள் வழியாக வீடுகளுக்குள் நுழைவதுண்டாம்.
மனைவிக்கு தைரியம் கூறிவிட்டு, பாம்பு பிடிப்பவர்களை அழைத்துள்ளார் அவரது கணவர். பாம்பு பிடிக்கும் ஒருவர் வந்து லாவகமாக அந்த பாம்பைப் பிடிக்க, அதற்குப் பிறகுதான் அந்தப் பெண்ணுக்கு உயிரே திரும்ப வந்ததுபோல இருந்திருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் இதுபோல, பாம்புகள், முதலைகள் போன்ற விலங்குகளை மக்கள் எதிர்கொள்வது அசாதாரண விடயம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |