முதல் முறையாக இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா! 10 ஆண்டுகளுக்கு பின்..மகுடம் சூடிய அவுஸ்திரேலிய அணி
சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி மகுடம் சூடியது.
சுருண்ட இந்திய அணி
பார்டர்-கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 181 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 157 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உஸ்மான் கவாஜா 41 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். வெப்ஸ்டர் 39 (34) ஓட்டங்களும், ட்ராவிஸ் ஹெட் 34 (38) ஓட்டங்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.
10 ஆண்டுகளுக்கு பிறகு
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா வென்றுள்ளது.
அதேசமயம் இந்திய அணி தோல்வியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக இழந்தது.
ஆட்டநாயகன் விருதை ஸ்காட் போலண்ட்-வும், தொடர் நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ராவும் பெற்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |