29 பந்தில் 59 ரன்! மிரட்டிய ஸ்டோய்னிஸ்: பயத்தை காட்டிய ஸ்கொட்லாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா
டி20 உலகக்கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது.
பிரண்டன் மெக்முல்லன் சிக்ஸர் மழை
செயின்ட் லூசியாவில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி அதிரடியில் மிரட்டியது. முன்சே 23 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.
அதன் பின்னர் சிக்ஸர் மழைபொழிந்த பிரண்டன் மெக்முல்லன் 34 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
பெர்ரிங்டன் 42
பொறுப்புடன் ஆடிய அணித்தலைவர் பெர்ரிங்டன் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 42 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் ஸ்கொட்லாந்து அணி (Scotland) 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே ஸ்கொட்லாந்து அதிர்ச்சி கொடுத்தது. பிராட் வீல் ஓவரில் வார்னர் (1) அவுட் ஆக, ஷாரிஃப் பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ் (8) ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 11 ஓட்டங்களில் வெளியேறினார். அப்போது களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) அதிரடியில் மிரட்டினார். அவருக்கு பக்க பலமாக டிராவிஸ் ஹெட் (Travis Head) சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
ஹெட், ஸ்டோய்னிஸ் அதகளம்
இவர்களின் கூட்டணி மூலம் ஜெட் வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. அரைசதம் விளாசிய ஹெட் 49 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பவுண்டரிகளை விரட்டிய ஸ்டோய்னிஸ் 29 பந்துகளில் 59 ஓட்டங்கள் விளாசிய நிலையில், மார்க் வாட் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
எனினும் டிம் டேவிட்டின் (24) அதிரடியில் கடைசி ஓவரில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஸ்கொட்லாந்து அணி வெளியேற, இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.
Onto the Super Eights ?
— Cricket Australia (@CricketAus) June 16, 2024
An undefeated start to the @T20WorldCup for our Aussie men as they move into the next stage of the tournament ? #T20WorldCup pic.twitter.com/9uROk6PHIV
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |