தமிழன் அஸ்வினை கண்டு நடுங்கும் அவுஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்! அடுத்த போட்டியின் கேம் சேஞ்சர் இவர் தானாம்
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர் அஸ்வின் கேம் சேஞ்சராக இருப்பார் என்று முன்னணி வீரர்கள் கூறி வருகின்றனர்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன.
இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 7-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் தமிழக வீரரான அஸ்வின் கேம் சேஞ்சராக இருப்பார் என்று முன்னணி வீரர்கள் கூறி வருகின்றனர்.
ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான ஸ்மித மற்று முக்கிய வீரர்களை தன்னுடைய துல்லியமான பந்து வீச்சு மூலம் மிரட்டினார்.
அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ளவே அவுஸ்திரேலியா வீரர்கள் மிரண்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. ஸ்பின் பவுலிங்கிற்கு இந்த பிட்ச் சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின் மிக முக்கியமான வீரராக இருப்பார் என்று கூறுகிறார்கள.
ஆனால் பிட்ச்சையும் தாண்டி அஸ்வின் இந்த போட்டியில் கேம் சேஞ்சராக உருவாக வேறு சில காரணங்களும் இருக்கிறது.
அஸ்வினின் ஸ்பின் பவுலிங்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.அஸ்வின் தற்போது மிக சிறப்பாக ஸ்பின் பவுலிங் செய்து வருகிறது. 4.2 டிகிரிக்கும் அதிகமாக அஸ்வின் தனது பந்தை ஸ்பின் செய்து வருகிறார்.
அதே சமயம் தேவைப்படும் நேரங்களில் 2 டிகிரிக்கும் குறைவாக ஸ்பின் செய்யும் வித்தையையும் அஸ்வின் கற்றுள்ளார்.
அஸ்வின் தற்போது புதிய பந்திலேயே நன்றாக பந்தை ஸ்விங் செய்கிறார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அஸ்வினின் ஸ்பின் பவுலிங்கில் கடுமையாக திணறுகிறார்கள். மார்னஸ், ஸ்மித், ஜோ பர்ன்ஸ் என்று முக்கியமான வீரர்கள் எல்லோரும் கடுமையாக திணறுகிறார்கள்.
இதனால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சிட்னி மைதானத்தில், அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள, அவுஸ்திரேலியா வீரர்கள் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.