குடியிருப்பு இலவசம்... வாயைப் பிளக்க வைக்கும் ஊதியம்: ஆனால் யாரும் செய்ய விரும்பாத வேலை
பல மாதங்களாக பயிற்சி பெற்ற ஒரு பொது மருத்துவருக்காக போராடி வருகிறது.
281,000 பவுண்டுகள் ஊதியம், இலவசமாக குடியிருக்க ஒரு வீடும் ஏற்பாடு செய்து தர உள்ளனர்.
அவுஸ்திரேலிய நகரம் ஒன்று 281,000 பவுண்டுகள் ஊதியம் மற்றும் இலவச வீடு அளிக்க முன்வந்தும் பொது மருத்துவர்கள் எவரும் இப்பகுதிக்கு வேலைக்கு செல்ல தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குயின்ஸ்லாந்தில் அமைந்துள்ள ஒரு குட்டி நகரத்தின் நிர்வாகமே பல மாதங்களாக பயிற்சி பெற்ற ஒரு பொது மருத்துவருக்காக போராடி வருகிறது. முழு நேரமாக பணியாற்றும் ஒரு பொது மருத்துவர் இல்லாமல் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
@getty
மூன்று மாதங்களுக்கு முன்னரே, வாயைப் பிளக்க வைக்கும் இந்த ஊதிய ஒப்பந்தத்தை நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. 281,000 பவுண்டுகள் ஊதியம் மட்டுமின்றி, இலவசமாக குடியிருக்க ஒரு வீடும் ஏற்பாடு செய்து தர உள்ளனர்.
கடந்த 18 மாதங்களாக McKinlay Shire நகர மக்கள் ஒரு முழு நேர பொது மருத்துவருக்காக வலைவீசி வருகின்றனர். ஆனால், இதுவரை ஒருவர் கூட இந்த விளம்பரத்திற்கு பதில் அளிக்கவோ விசாரிக்கவோ இல்லை என்றே கூறப்படுகிறது.
இதனால், இப்பகுதி மக்கள் தற்காலிக மருத்துவர்களின் உதவியை நாடி வருகின்றனர். வாரத்திற்கு இரண்டு நாட்கள் இங்குள்ள நோயாளிகளை சில மருத்துவர்கள் வந்து சந்தித்துச் செல்கின்றனர்.
எஞ்சிய நாட்களில் மருத்துவ தேவை ஏற்பட்டால், இரண்டு மணி நேரம் பயணப்பட்டு சிகிச்சை தேடும் நிலை உள்ளது. இதனிடையே, இரு மருத்துவர்கள் உதவ முன்வந்துள்ளதாகவும், ஆனால் இருவரும் பணி முடித்து, அவர்களின் சொந்த குடியிருப்புக்கு திரும்பவே விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் உள்ள இளம் மருத்துவர்கள் இதுபோன்ற குட்டி நகரங்களில் தங்கள் சேவையை அளிக்க முன்வராதது, அவர்களின் துணைகளுக்கு உரிய வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்பதாலையே என சில ஊடகங்கள் கூறுகின்றனர்.
மட்டுமின்றி, பயிற்சி பெற்ற பொது மருத்துவர்களுக்கு சில புறநகர் மாவட்டங்களில் அவர்களின் சேவைக்கு மூன்று மடங்கு கட்டணம் அளிக்கும் நிலையும் உள்ளது என்கிறார்கள்.