8 பில்லியன் டொலர் செலவில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை அமைக்கவுள்ள நாடு
அவுஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தை அமைக்க 8 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளது.
அவுஸ்திரேலிய அரசு, AUKUS ஒப்பந்தத்தின் கீழ் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க, 8 பில்லியன் டொலர் முதலீட்டில் கப்பல் கட்டுமான தளத்தை அமைக்கவுள்ளது.
AUKUS ஒப்பந்தம் 2021-ல் அவுஸ்திரேலியா, பிரித்தனையா மற்றும் அமெரிக்கா இணைந்து உருவாக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனாவின் இந்தோ-பசிபிக் பிராந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வகையில் அவுஸ்திரேலியாவிற்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் வழங்கப்படும்.
இத்திட்டம் அவுஸ்திரேலியாவின் கப்பல் காட்டும் தொழில்நுட்பத்தையும்,நீர்மூழ்கிக் கப்பல் பராமரிப்பு திறனையும் மேம்படுத்தும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Richard Marles கூறியுள்ளார்.
ஏற்கெனவே, Henderson Shipyard-ல் கடந்த ஆண்டு 84 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டு, அங்கு பராமரிப்பு மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய துறைமுகத்தில் அவுஸ்திரேலிய இராணுவத்திற்கான புதிய landing craft-கள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கான frigates கப்பல்களும் கட்டப்படும். இதன்மூலம் 10,000 உள்ளூர் வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது.
AUKUS ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா அதன் Virginia வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அவுஸ்திரேலியாவிற்கு விற்பனை செய்யும். பின்னர் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து புதிய AUKUS வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Australia nuclear submarine shipyard, AUKUS nuclear submarine, AUKUS nuclear submarine shipyard