அவுஸ்திரேலியா தேர்தல் முடிவுகள்: புதிய பிரதமராகிறார் அந்தோனி அல்பானீஸ்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் தேர்தலில் தொழில் கட்சியின் தலைவர் அந்தோனி அல்பானீஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என அந்த நாட்டின் முக்கிய செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலியாவில் 17 மில்லியன் மக்கள் ஏற்கனவே புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கெடுப்பில் வாக்களித்து இருந்த நிலையில் சனிக்கிழமையான இன்றும் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் 51.2 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டு இருக்கும் சூழலில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசனை பின்னுக்கு தள்ளி அவுஸ்திரேலியாவின் தொழில் கட்சி தலைவர் அந்தோனி அல்பானீஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் என தகவல் தெரிவந்துள்ளது.
BREAKING: Scott Morrison concedes election defeat and refers to Anthony Albanese as the “incoming Prime Minister”
— Josh Butler (@JoshButler) May 21, 2022
Here’s the explosion of applause at the Labor event as his speech is played on TV. Albanese is expected to arrive here shortly #ausvotes pic.twitter.com/c4smFnfPed
அவுஸ்திரேலியாவில் ஆட்சியை கைப்பற்ற மொத்தமுள்ள 151 உறுப்பினர் இடங்களில் 76 உறுப்பினர் இடங்கள் அவசியம் என்ற நிலையில், இதுவரை நடைபெற்று முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி கூட்டணி 52 உறுப்பினர் இடங்களையும், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழில் கட்சி 72 உறுப்பினர் இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
வெற்றிப்பெற 76 இடங்களே தேவை என்ற நிலையில் வாக்கு எண்ணிக்கையின் மத்தியிலேயே 72 உறுப்பினர் இடங்களை தொழில் கட்சி கைப்பற்றியதன் முலம் அந்தோனி அல்பானீஸ் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ஆசிய-பசிபிக் மாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக...வெளிநடப்பு செய்த உலக நாடுகள்!
மேலும் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான புதிய அரசாங்கம் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்குமா அல்லது கூட்டணி பலத்துடன் ஆட்சியை அமைக்குமா என்பதே தேர்தலின் அடுத்த நகர்வு என முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.