ஆசிய-பசிபிக் மாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக...வெளிநடப்பு செய்த உலக நாடுகள்!
உக்ரைன் தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாங்காக்-கில் நடைப்பெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தில் அமெரிக்கா ஜப்பான் போன்ற 5 உறுப்பு நாடுகள் வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாடு சனிக்கிழமையான இன்று தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்-கில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை மற்றும் அதனால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
Photo courtesy of Thai government
இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய பொருளாதார அமைச்சர் மாக்சிம் ரெஷெட்னிகோவ் உரையாற்றும் போது அமெரிக்கா, ஜப்பான், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த வெளிநடப்பு குறித்து கருத்து தெரிவித்த பிரதிநிதி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை வெளிவரவிருக்கும் கூட்டத்தின் இறுதி அறிக்கையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கை தொடர்பான கடுமையான கருத்துகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதே வெளியேறிய உறுப்பு நாடுகளின் முக்கிய தேவை என தெரிவித்துள்ளார்.
Apec Twitter pic
கூடுதல் செய்திகளுக்கு: சிறுவனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்: சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என பிரதமர் வேண்டுகோள்
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய அமைச்சர் தனது உரையை நிறைவு செய்ததை அடுத்து, வெளியேறிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மீண்டும் கூட்டத்திற்கு திரும்பியதாக தாய்லாந்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.