சிறுவனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்: சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என பிரதமர் வேண்டுகோள்
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் வெஸ்ட் பாங்கின் ஜெனின் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாக பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலின் வெஸ்ட் பாங்க் பகுதியின் ஆயுதமேந்திய பாலஸ்தீனிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மார்ச் மாத இறுதியில் இஸ்ரேல் சிறப்பு படைகள் ஜெனின் நகரத்திற்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த ஊடுருவல் தாக்குதலில் பலர் கொல்லப்பட்ட நிலையில், பிரபல செய்தி நிறுவனமான அல் ஜசீரா-வின் செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே-வும் கடந்த மே 11ம் திகதி சுட்டு கொல்லப்பட்டார்.
REUTERS/Raneen Sawafta
இந்தநிலையில், இஸ்ரேல் ராணுவ ஊடுருவலுக்கு எதிராக போராட்டி வந்த பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு சேர்ந்த 17 வயது சிறுவனை சனிக் கிழமையான இன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுட்டு கொன்றுள்ளது.
இதுத் தொடர்பாக பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு தெரிவித்த தகவலில், கொல்லப்பட்ட 17 வயது சிறுவன் தங்கள் குழுவை சேர்ந்தவன் என்றும், அவர் தங்களுடன் இணைந்து இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராடியவர் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவன் சந்தேகிக்கப்படும் குழுவை சேர்ந்தவரா என்பது தெளிவாக தெரியவில்லை என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
REUTERS/Raneen Sawafta
அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், சந்தேகிக்கப்படும் பாலஸ்தீனிய குழுவினர் தான் முதலில் இஸ்ரேல் ராணுவத்தின் மீது வெடிக்குண்டுகளை வீசியதாகவும் அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் மட்டுமே நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: 12 நாடுகளுக்கு பரவிய குரங்கம்மை நோய்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
REUTERS/Raneen Sawafta
இந்நிலையில், எங்கள் மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு அத்துமீறல்களை கடுமையாக எதிர்கிறோம், மேலும் சர்வதேச சமுகம் சம்பந்தபட்ட குற்றவாளிகளை கண்டித்து, குற்றத்திற்கான பொறுப்பை ஏற்க செய்ய வேண்டும் என பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே தெரிவித்துள்ளார்.