புதிய தூதரகம் கட்ட நிலம் தரமறுத்த அவுஸ்திரேலியா: ரஷ்யா கண்டனம்
அவுஸ்திரேலியாவில் புதிய தூதரகம் கட்டுவதற்கு நிலம் தர மறுத்ததால் ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் ரஷ்ய தூதரகக் கட்டடம் கட்டுவதற்கான நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலம், ரஷ்ய வெறுப்பு மற்றும் அச்சத்தின் பாதையை அந்த நாடு தோ்ந்தெடுத்துள்ளது என ரஷ்ய அரசு செய்தித் தொடா்பாளா் Dmitry Peskov எச்சரித்துள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய டிமித்ரி பெஸ்கோவ், தூதரகக் கட்டடப் பணிகளை ரத்து செய்து அவுஸ்திரேலியா நட்புவிரோத செயலில் ஈடுபட்டுள்ளது எனக் கூறினார்.
AP
அவுஸ்திரேலிய தலைநகா் கான்பெராவின் கிரிஃபித் பகுதியில் தற்போது ரஷ்ய தூதரகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு நெருக்கமாக அமைந்துள்ள யாரலும்லா பகுதியில் புதிய தூதரகக் கட்டடத்தைக் கட்ட ரஷ்யா அனுமதி கோரியிருந்தது.
ஆனால், நாடாளுமன்றத்துக்கு அருகே ரஷ்ய தூதரகம் கட்டப்பட்டால், அது ரஷ்ய அரசின் ரகசிய உளவுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பபடலாம் என்று அவுஸ்திரேலிய எம்.பி.க்கள் அச்சம் தெரிவித்தனா்.
AP
இதையடுத்து, தூதரகக் கட்டப் பணிகளுக்காக நிலம் ஒதுக்கீடு செய்யும் குத்தகை ஒப்பந்தத்தை தடை செய்யும் தீா்மானத்தை அவா்கள் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றினா். இதன் காரணமாகவே ரஷ்யா இப்போது கண்டனம் தெரிவித்துள்ளது.