16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு YouTube உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தடை செய்யும் நாடு
அவுஸ்திரேலிய அரசு, 16 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு YouTube உட்பட முக்கிய சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
முதலில் YouTube தற்காலிகமாக விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், eSafety கமிஷனரான ஜூலி இன்மன் கிராண்ட் வழங்கிய பரிந்துரை மற்றும் 2,600 சிறார்களிடம் நடத்தப்பட்ட தேசிய சர்வேயின் அடிப்படையில் முடிவு மாற்றப்பட்டது.
அந்த சர்வேயில், சுமார் 40% சிறார்கள் YouTube-ல் கேடான உள்ளடக்கங்களை பார்த்ததாக தெரிவித்து இருந்தனர்.
YouTube Kids பயன்பாடு இத்தடையிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.
ஆனால், சாதாரண YouTube-இல் குழந்தைகள் காணொளி பதிவேற்றம், கருத்திடல் மற்றும் வயது வரம்புடைய உள்ளடக்கங்களை அணுகுதல் ஆகியவை தடை செய்யப்படும்.
தடைசெய்யப்பட்ட சமூக வலைதளங்கள்:
TikTok
Snapchat
X (Twitter)
YouTube
வயது சரிபார்ப்பிறகு, அரசு ID மட்டும் கேட்பதற்கு பதிலாக “நியாயமான மாற்று முறைகள்” பயன்படுத்த வேண்டும். முகம் மற்றும் குரல் அடிப்படையிலான AI பரிசோதனைகள் தற்போது ஒப்புகைக்குரிய துல்லியத்தை தரவில்லை. இறுதி அறிவுரை இந்த ஆண்டுக்குப் பிறகு வரும்.
ஊடக தளங்கள் விதிமுறைகளை மீறினால், AUD 49.5 மில்லியன் அபராதம் விதிக்கப்படும். ஆனால், குழந்தைகள் தடை மீறினால் அவர்களுக்கு தண்டனை இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Australia social media ban 2025, YouTube banned under 16 Australia, Albanese YouTube child safety, eSafety Commissioner Australia, Underage social media laws, Facebook Instagram TikTok ban kids, Australia digital safety children, Social media age restriction law