இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையை நகலெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் மீண்டும் தோல்வி
இந்தியாவின் அக்னி-5 போன்ற ஏவுகணையை உருவாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு மீண்டும் தோல்வியே கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் தனது Ababeel எனும் மிட் ரேஞ்ச் ஏவுகணையை (MRBM) மீண்டும் சோதனை செய்தது. இது இந்தியாவின் Agni-5 ஐ நகலெடுக்க முயன்றதற்கான அடுத்த முயற்சி.
ஆனால் இந்த சோதனையும் தோல்வியடைந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் மீண்டும் சர்வதேச ரீதியாக அவமானம் தரும் நிலைக்கு வந்துள்ளது.
Ababeel ஏவுகணை, 2000 கிமீ தூரத்தை எட்டக்கூடியது. இது MIRV (Multiple Independently Targetable Reentry Vehicle) தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது, அதாவது ஒரே மிசைல் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இதே தொழில்நுட்பம் இந்தியாவின் Agni-5 மிசைலிலும் உள்ளது, ஆனால் இந்தியா தனது சொந்த தொழில்நுட்பத்தில் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது.
2023 அக்டோபரிலும் Ababeel சோதனை தோல்வியடைந்தது. தற்போதைய சோதனையிலும் பாகிஸ்தான் விளைவான முன்னேற்றம் காணவில்லை. மாறாக, இந்தியா 2024 மார்ச் மாதத்தில் Agni-5ஐ வெற்றிகரமாக சோதித்து, உலகளாவிய ரீதியில் தனது பாதுகாப்புத் திறனைக் காட்டியுள்ளது.
பாகிஸ்தானின் பலவீனங்களுக்கு முக்கிய காரணம் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு இல்லாமை, சீனாவை முழுமையாக நம்புவது, பொருளாதார வரம்புகள் மற்றும் சோதனை உள்கட்டமைப்பு இல்லாமை என்பவையாகும். இந்தியாவிடம் DRDO, HAL போன்ற தொழில்நுட்ப மேதைகள் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan Ababeel missile failure, Agni-5 vs Ababeel comparison, Pakistan missile test news 2025, MIRV missile technology Pakistan, India Pakistan missile race, Ababeel missile range, DRDO Agni 5 success, Pakistani missile engineering flaws, Shaheen vs Agni missile, ICBM technology India vs Pakistan