ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா
Australia beat zimbabwe by 1 wicket: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹராரேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
சிக்கந்தர் ரஸா 81 ஓட்டங்கள்
அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேயில் நடந்தது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 271 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா 72 பந்துகளில் 81 ஓட்டங்களும், கிரேக் எர்வின் 59 ஓட்டங்களும் எடுத்தனர். நேதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில் ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) நிதானமாக ஆடி 103 ஓட்டங்கள் குவித்தார்.
அவுஸ்திரேலியா வெற்றி
ஆனால், ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 245 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள் என அவுஸ்திரேலியா தடுமாறியது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நேதன் எல்லிஸ் (Nathan Ellis), ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 272 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலிஸ் ஆட்டநாயகன் விருதும், கூப்பர் கோனொலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

