அவுஸ்திரேலியாவில் பூஸ்டர் தடுப்பூசி குறித்த மிக முக்கிய அறிவிப்பு!
அவுஸ்திரேலியாவில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸின் மாறுபாடான Omicron உலகின் பல நாடுகளில் பரவியதால், COVID-19 பூஸ்டர் தடுப்பூசிகளுக்கான காத்திருப்பு காலத்தை குறைப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று (டிசம்பர் 12) அறிவித்தது.
அவுஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
தற்போது, Omicron பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அவுஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் (Greg Hunt) ஒரு மாநாட்டில் பேசியபோது, அரசாங்கம் இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸுக்கு இடையிலான இடைவெளியை 6 மாதங்களில் 5 மாதங்களாக குறைக்கும் என்று அறிவித்தார்.
If you got your second dose in July, it's time to get your booster.
— VicGovDH (@VicGovDH) December 12, 2021
ATAGI - Australia's technical advisory group on immunisation - has this weekend recommended a five month interval between second and third doses of the COVID-19 vaccine, reduced from six months. pic.twitter.com/1EoJu7D9dq
பூஸ்டர்களின் தேவையை ஆதரிக்கும் இஸ்ரேலின் தரவை மேற்கோள் காட்டிய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட், COVID-19 நோய்த்தொற்றின் தீவிரத்தை இது குறைக்க வழிவகுக்கும் என்று கூறினார்.
இதற்கிடையில், விக்டோரியா மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரி பிரட் சுட்டன் (Brett Sutton), அவுஸ்திரேலிய அரசாங்கம் நோய்த்தடுப்புக்கான அவுஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (Australian Technical Advisory Group on Immunisation) பரிந்துரைகளின் அடிப்படையில் ஆலோசனையை மாற்றியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
அவுஸ்திரேலியாவில் இதுவரை 80% மக்கள் முழுமையாக (இரண்டு தடுப்பூசிகள்) தடுப்பூசி போட்டுள்ளனர்.