அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (46) சனிக்கிழமை இரவு டவுன்ஸ்வில்லுக்கு வெளியே சுமார் 50 கிமீ தொலைவில் கார் விபத்தில் உயிரிழந்தார்.
சைமண்ட்ஸ் சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக குயின்ஸ்லாந்து காவல்துறை அறிக்கை கூறுகிறது.
சைமண்ட்ஸ் ஹெர்வி ரேஞ்ச் கார் சாலையில் ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் சாலையை விட்டு உருண்டு கவிழ்ந்தது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர், ஆனால் காரில் இருந்த ஒரே நபரான சைமண்ட்ஸை காப்பாற்ற முடியவில்லை.
மார்ச் மாதம் ஷேன் வார்ன் மற்றும் ராட் மார்ஷ் ஆகியோரின் துயர மரணத்தைத் தொடர்ந்து, இப்போது மூன்றாவதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சைமண்ட்ஸ் திடீரென விபத்தில் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரானார் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்!




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022