அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வீட்டிற்குள் புகுந்த மலைப்பாம்பு; என்ன செய்தார் தெரியுமா?
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ராத் வீட்டிற்குள் மலைப்பாம்பு புகுந்தது.
ICC ஆண்கள் ODI உலகக் கோப்பை 2023 அக்டோபரில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த மெகா போட்டி அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்காக ஆவலுடன் காத்திருப்பதாக அவுஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் சமீபத்தில் கூறினார்.
அவுஸ்திரேலியா 1999, 2003 மற்றும் 2007ல் உலகக் கோப்பையை வென்றது. இந்த மூன்று மெகா போட்டிகளிலும் மெக்ராத் முக்கிய வீரராக இருந்தார்.
உலகக் கோப்பைப் போட்டி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் விஷயங்களில் மெக்ராத் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசுவார் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் மெக்ராத் மலைப்பாம்புடன் விளையாடிக் கொண்டிருந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மெக்ராத் வெளியிட்ட சமீபத்திய வீடியோவில், அவர் தனது வீட்டை ஆக்கிரமித்த மலைப்பாம்பை கவனமாக அகற்றுவது தெரிகிறது. காணொளியின்படி மலைப்பாம்பு மெக்ராத்தின் வீட்டிற்குள் ஊர்ந்து சென்றது. அதை கவனித்த முன்னாள் கிரிக்கெட் வீரர், வீட்டை துடைக்கும் குச்சியால் அகற்ற முயன்றார்.
ஆனால் அது திடீரென்று சத்தமிட்டது. மெக்ராத், மலைப்பாம்பின் வாலைக் கவனமாகக் கையால் எடுத்து, அச்சமின்றி வீட்டுக்கு வெளியே எடுத்துச் செல்வதை வீடியோவில் காணலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மெக்ராத் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். மெக்ராத்துக்கு தைரியம் அதிகம் என்று வேறு சிலர் எழுதினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Python In Glenn McGrath Home, Australian Cricketer, Australia snake