இஸ்ரேல் தலைநகர் இனி ஜெருசலேம் இல்லை: அங்கீகரிப்பை கைவிடும் அவுஸ்திரேலியா
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதை அவுஸ்திரேலியா கைவிடுகிறது.
ஜெருசலேம் பிரச்சனையில் இரு தரப்பு தீர்வில் அவுஸ்திரேலியா உறுதியாக உள்ளது.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதை அவுஸ்திரேலியா கைவிடுவதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் அறிவித்துள்ளார்.
யூதர்களுக்கான தனி நாடாக இஸ்ரேல் அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜெருசலேம் நகரை தன்னுடன் இணைத்து முழு நகரத்தையும் அதன் பிரிக்க முடியாத தலைநகராக அறிவித்தது.
இதற்கு அமெரிக்கா தலைமையிலான பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து இருந்தனர்.
AFP
மேலும் கடந்த 2018ம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் முன்னாள் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் ஸ்காட் மோரிசனும் மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக முறையாக அங்கீகரித்தார்.
ஆனால் அவுஸ்திரேலிய தூதரகம் இஸ்ரேலின் டெல் அவிவ்-வில் நீடிக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த முந்தைய அரசாங்கத்தின் அங்கீகாரத்தை அவுஸ்திரேலியா மாற்றியமைத்துள்ளதாக தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய- இடது தொழிலாளர் கட்சி அரசாங்க அமைச்சரவை மீண்டும் டெல் அவிவ் தலைநகராக அங்கீகரிக்க ஒப்புக்கொண்டது மற்றும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் ஜெருசலேமின் நிலை தீர்க்கப்பட வேண்டும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
AP
மேலும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலுக்கு அவுஸ்திரேலியா இரு தரப்பு தீர்வில் உறுதியாக உள்ளது, அத்துடன் இந்த வாய்ப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அணுகுமுறையை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று வோங் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு; தவறு செய்துவிட்டேன், ராஜினாமா செய்கிறேன்: பிரித்தானிய உள்துறைச் செயலர் பதவி விலக இதுதான் காரணமாம்
அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாபிட் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்ற விஷயங்களை மிகவும் தீவிரமாகவும் தொழில் ரீதியாகவும் நிர்வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.