அமெரிக்கா- உக்ரைன் பதற்றநிலை: ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக மற்றொரு நாடு
உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளுடன் மற்றொரு நாடு இணைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட கடுமையான மோதல், உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் அன்டோனி அல்பனீஸ் (Anthony Albanese), மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து உக்ரைனுக்கு தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆல்பனீஸ் கருத்து
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அல்பனீஸ், "உக்ரைன் மக்கள் தங்கள் சொந்த தேசிய இறையாண்மைக்காக மட்டும் போராடவில்லை, அவர்கள் சர்வதேச சட்டத்தின் ஒழுங்கை பாதுகாக்க போராடுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
"புடின் தலைமையிலான ஆட்சி உக்ரைன் மட்டுமல்ல, அதன் சுற்றுப்புற நாடுகளையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடுகிறது" என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"நாம் உக்ரைனுடன் இருப்போம், அவற்றின் போராட்டம் வெற்றிபெறும் வரை உதவி தொடரும்" என உறுதியளித்தார்.
மேற்கத்திய ஆதரவு தொடரும்
இதேபோல், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி ஆகியோர் உக்ரைனுக்கு ஆதரவாக தங்களது முழுமையான ஒத்துழைப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த வளர்ச்சி, உலக நாடுகளின் அரசியல் சமநிலையை மாற்றுமா? என்பது வருங்காலத்தில் தெளிவாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine, Zelensky, Australia