ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்க ஜெலென்ஸ்கி மறுப்பு., மோசமாகும் அமெரிக்கா-உக்ரைன் உறவு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின் போது தான் எந்த "தவறும்" செய்ததாக நம்பவில்லை என்றும், ட்ரம்பிடம் மன்னிப்பு கேட்க எந்த காரணமும் இல்லை என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.
கடுமையான சந்திப்பிற்கு பிறகு உடனடியாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெலென்ஸ்கி இதனை தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போது, ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
"நீங்கள் மூன்றாம் உலகப்போரில் பங்கெடுக்க முயற்சிக்கிறீர்கள். உங்களை அதிகமாக ஆதரித்த நாட்டுக்கு இது மரியாதையற்ற செயலாகும்" என்று ட்ரம்ப் கூறினார்.
இதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, "நாங்கள் தவறு செய்தோம் என நினைக்கவில்லை. சில விஷயங்களை பத்திரிகை முன்பாக பேசுவது பொருத்தமல்ல" என்று விளக்கினார்.
‼️ Full video of the heated verbal clash between Trump, Zelenskyy, and Vance. pic.twitter.com/YoIuODslBk
— NEXTA (@nexta_tv) February 28, 2025
அமெரிக்கா ஆதரவை நிறுத்தும் திட்டம்?
இந்த சந்திப்பு கடுமையான பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்திருப்பதுபடி, அமெரிக்கா தனது ராணுவ உதவியை நிறுத்த திட்டமிட்டு வருகிறது.
இச்சந்திப்புக்கு பின்னர் உலக அரசியல் மற்றும் உக்ரைன்-அமெரிக்க உறவில் மாற்றம் ஏற்படுமா? என்பது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
trump zelensky meeting, trump zelenskyy meeting, Ukraine US