அவுஸ்திரேலியாவில் பொதுமுடக்கம்? சுகாதார அமைச்சர் முக்கிய தகவல்
நெதர்லாந்தை போல் அவுஸ்திரேலியா பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டிய சூழலில் இல்லை என சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் அதிக தடுப்பூசி விகிதம் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற உதவும் நிலையில், நாட்டில் புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்தாலும், கிறிஸ்துமஸ் பண்டிகைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தனர்.
Omicron மாறுபாட்டின் பரவலைத் தடுக்க ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கடுமையான பொதுமுடக்க விதிகளை மீண்டும் அமுல்படுத்தியுள்ளது.
அதனைச் சுட்டிக்காட்டி, அதையே அவுஸ்திரேலியா பின்பற்றத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து ஹன்ட் ஒரு தொலைக்காட்சி ஊடக மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவுஸ்த்ரேலியா கோடைகாலத்திற்குள் நுழைகிறது, இங்கு மிகவும் மாறுபட்ட சூழ்நிலைகள் உள்ளன மற்றும் அவுஸ்திரேலியா உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி விகிதங்களில் ஒன்றை கொண்டுள்ளது. எனவே அவுஸ்திரேலியாவில் பொதுடக்கத்தை அறிவிப்பது அவசியம் இல்லை என நினைக்கிறோம் என்று கூறினார்.
மேலும், அவுஸ்திரேலியா எதற்கும் தயாராக இருக்கிறது என்று ஹன்ட் கூறினார்.
16 வயதுக்கு மேற்பட்ட அவுஸ்திரேலியர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.