நிலத்தை தோண்டும் போது கிடைத்த 1.2 கிலோ தங்கம்
australia man unearths 1.2 kg gold nugget: அவுஸ்திரேலியாவில் நிலத்தை தோண்டும் போது ஒரு நபருக்கு உருளைக்கிழங்கு வடிவிலான 1.2 கிலோ எடையுள்ள தங்கம் கிடைத்துள்ளது.
நிலத்தை தோண்டும் போது கிடைத்த 1.2 கிலோ தங்கம்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸின் தொலைதூரப் பகுதியான திபூபுராவில், தனது அடையாளத்தை வெளிபடுத்த விரும்பாத நபர், நிலத்தை தோண்டியுள்ளார்.
ஈயத் தோட்டாக்கள், குதிரை லாடங்கள் என பல்வேறு பொருட்கள் அகப்பட்ட போது, உருளைக்கிழங்கு வடிவிலான பொருள் ஒன்றையும் கண்டுள்ளார். அதை சுரண்டிய தங்க நிறத்தில் மின்னிட அது தங்கம்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த தங்க கட்டிக்கு, டிபூபுரா ஸ்பட் (Tibooburra Spud) என அவர் பெயர் சூட்டியுள்ளார்.
அந்த உருளைக்கிழங்கு வடிவிலான தங்கம் 1.2 கிலோகிராம் எடை கொண்டது. மேலும் இதில் 940 கிராம் தூய தங்கம் உள்ளது.
இது, 1,60,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.1.52 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு தனிப்பட்ட சேகரிப்பாளருக்கு விற்கப்பட்டால், அது 2,00,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.1.90 கோடி) வரை விலை பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1880களின் பிற்பகுதியில் இருந்து திபூபுராவைச் சுற்றி நடைபெற்று வரும் தங்கத் தேடல், பல சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் பொழுது போக்கும் அம்சமாக உள்ளது.
திபூபுரா காமனில் புதைபடிவங்களைத் தேடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள மவுண்ட் ஸ்டூவர்ட் மற்றும் கம்வேல் ஆகிய 2 நிலையங்களிலாவது, கட்டணம் செலுத்தி புதைபடிவங்களைத் தேட அனுமதிக்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ள அவுஸ்திரேலியா, ஆண்டுக்கு 300 டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது.